மும்பை

ற்கனவே ஓடும் ரெயில்கள்   40% காலியாக செல்வதால் புல்லட் ரெயில் மூலம் மேற்கு ரெயில்வே மேலும்  நஷ்டம் அடையும் என தகவல் வந்துள்ளது.

பிரதமர் மோடியின் கனவான புல்லட் ரெயில் அகமதாபாத் – மும்பை வழித்தடத்தில் துவங்க துவக்கப்பணிகள் ஆரம்பித்துள்ளன.    ஏற்கனவே மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் பல ரெயில் சேவைகள் உள்ளன.  இந்நிலையில் மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்கலி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த திட்டம் குறித்து ஒரு மனு மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்.   அவர் தனது மனுவில், “இந்திய அரசு தீவிரமாக உள்ள இந்த புல்லட் ரெயில் திட்டத்தில் ரூ. 1 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.   அதனால் இந்திய ரெயில்வேக்கு எத்தனை லாபம் வரும்” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மேற்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.   அந்த பதிலில், “இந்த வழித்தடங்களில் ஏற்கனவே பல ரெயில்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.  கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் 40% இடங்கள் காலியாகவே இந்த ரெயில்கள் பயணிக்கின்றன.  அதே போல் அகமதாபாத் – மும்பை இடையே 44% இடங்கள் காலியாகவே ரெயில்கள் செல்கின்றன.   இதனால் மாதத்துக்கு ரூ. 10 கோடி என்னும் கணக்கில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் புல்லட் ரெயிலுக்கும் இதே நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.   அறிமுகப் படுத்திய சில காலங்களில் காலி இல்லாமல் செல்லலாம் என்னும் நிலை உள்ள போதிலும் கட்டணம் என்பது பெரும் பங்கு வகிக்கும்.   பயணிக்கும் நேரமும் விமானத்தை விட அதிகம் என்பதால் புல்லட் ரெயிலில் பயணிக்க அதிக மக்கள் விரும்ப மாட்டார்கள்.  எனவே புல்லட் ரெயில் லாபத்தை ஈட்டுமா என்பது சந்தேகமே” எனத் தெரிவித்துள்ளது.