சண்டிகர்: கடந்த கால ஆட்சியின்போது தவறிழைத்ததற்காக, சீக்கியர்களின் உச்ச தற்காலிக அதிகாரமான அகல் தக்த், மதரீதியான தண்டனையை அறிவித்தது. அதை ஏற்று, ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான, சுக்பீர் சிங் பாதல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு வெளியே காவலில் நின்று தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.
இந்த நிலையில், பொற்கோயில் வளாகத்திற்குள் பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வர் “தண்டனை” காவலர் பணியில் இன்று இரண்டாவத நாளாக அமர்ந்திருந்த போது அவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதல் மற்றும் பிற மூத்த அகாலி தலைவர்கள் சீக்கிய சமூகத்தை வழிநடத்த தகுதியற்றவர்கள் என்று கூறி அகல் தக்த் ஜதேதார் கியானி ரக்பீர் சிங் இந்த தண்டனைகளை விதித்துள்ளார். சீக்கிய மத அமைப்பு வழங்கிய 2 நாட்கள் மத தண்டனை நிறைவேற்றும் வகையில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல், நேற்று முதல் பொற் கோயில் வாயில் காவலராக பணியாற்றி வருகிறார். அவரோடு முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தீண்ட்சாவும் தமக்கான தண்டனையை அனுபவித்தார். மேலும், தண்டனை விதிக்கப்பட்ட மற்ற ஷிரோன்மணி அகாலி தல் கட்சி தலைவர்கள் சிலர் கழிவறையை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சுக்பீர் சிங் பாதல் கால் எலும்பு முறிவு காரணமாக அவர் வாயிலில் சேரில் உர்கார்ந்துகொண்டு தண்டனையை அனுபவிக்க அகல் தக்த் அனுமதி வழங்கியது. பாதல் அதிக உடல் ரீதியான பணிகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஈட்டியுடன் காவலில் நிற்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையேற்று பாதல் பொற்கோயில் வாசலில், அதற்கான உடை அணிந்து காவல்பணியில் ஈடுபட்டார்.
பஞ்சாப் மாநிலத்தில், 2007 முதல் 2017 வரை அகாலிதளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சி காலக்கட்டத்தில், செய்த “தவறுகளுக்காக” பாதல் மற்றும் பிற SAD தலைவர்களுக்கு சீக்கியர்களின் உச்ச தற்காலிக அதிகாரமான அகல் தக்த், மதரீதியான தண்டனையை விதித்தார்.
முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யான சுக்தேவ் சிங் திண்ட்சாவும் இதேபோன்ற சலுகையைப் பெற்று, பாதலுடன் ஒரு கேட் கீப்பராக சேர்ந்தார், அவர்கள் பாரம்பரிய வேலைக்காரன் உடையை அணிந்து, பணிவின் அடையாளமாக ஈட்டியைப் பிடித்துக்கொண்டு காவல்காரனாக பணியாற்றினர். மற்றும் முன்னாள் கேபினட் அமைச்சர்கள் உட்பட மற்ற மூத்த SAD தலைவர்கள், கழிவறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சமூக சமையலறையில் உதவுதல் போன்ற பல்வேறு சேவைகளை செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று தண்டனையை நிறைவேற்றி வந்தபோது, அவர்மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள், துப்பாக்கியால் சுட்டவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரது பெயர் நாராயண் சிங் சௌரா என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
கூடுதலாக, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு, சீக்கிய சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அகல் தக்த் ஜதேதார், ஃபக்ர்-இ-கௌம் (தேசத்தின் பெருமை) பட்டத்தை ரத்து செய்தார் .
இந்தப் பெருமையைப் பெற்ற முதல் அரசியல் தலைவர் இவர்தான். சுக்பீர் சிங் பாதலின் மறைந்த தந்தை பிரகாஷ் சிங் பாதல் ஆவார். சுக்மணி சாஹிப் ஓதுதல், நித்னெம் (தினசரி சீக்கிய பிரார்த்தனை) செய்வது மற்ற பணிகளாகும்.
படுகொலை சம்பவங்கள், கோட்காபுராவில் போலீஸ் நடவடிக்கைகள் மற்றும் குர்மீத் ராம் ரஹீமைப் பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கியமான சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியதற்காக SAD தலைமை விமர்சிக்கப்பட்டது. பஞ்சாபின் போர்க்குணமிக்க காலத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போலீஸ் தலைமை இயக்குநர் சுமேத் சிங் சைனியின் சர்ச்சைக்குரிய நியமனமும் விமர்சனங்களில் ஒன்றாகும்.
மேலும், பாதல்களின் செல்வாக்கின் கீழ், தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமை சர்ச்சைக்குரிய வகையில் மன்னித்த முன்னாள் ஜதேதார் கியானி குர்பச்சன் சிங்குக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெறுமாறு அகல் தக்த் உத்தரவிட்டது.