டெல்லி:

த்திய பாஜக அரசின் சமீபகால நடவடிக்கைகள் தேசிய ஜனநயாக கூட்டணி கட்சிகளுக்க மகிழ்ச்சியை தரவில்லை என்று, பாஜக கூட்டணி கட்சியான அகாலிதளம் கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி உள்ளது பஞ்சாப் அகாலிதளம் கட்சி. இந்த கூட்டணி கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மண்ணை கவ்விய நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற முடியவில்லை.

இந்த நிலையில், சமீபகாலமாக மத்தியஅரசு அமல்படுத்தி வரும் மசோதாக்கள் மற்றும் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியை தரவில்லை என்று அகாலிதளம் குரல் எழுப்பி உள்ளது.

ஷிரோமணி அகாலிதளத் தலைவர் எம்.பி. நரேஷ் குஜ்ரால் செய்தியாளர்களிடம் பேசியதுபோது,  பாஜகவை ஆதரிக்கும் தனது கட்சியும் மத்திய அமைச்சரவையில்  இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்தவர், குடியுரிமை திருத்த சட்டத்தில், திருத்தங்கள் செய்யப்படா விட்டால், பாஜகவுக்கு அளித்து வரும்  ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து ஆலோசிப்போம் என்றும் என்று தெரிவித்தார்.

இன்று வாஜ்பாய் நினைவுதினம் அணுசரிக்கப்படும்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின்  தற்போதைய தலைமுறை, வாஜ்பாய் கூட்டணி கட்சிகளிடம் நடந்துகொள்ளும் விதத்தை  நினைவுபடுத்தியவர், அதை, மறைந்த முன்னாள் பிரதமரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நட்பு நாடுகளை மதிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

பாஜகவுக்கு “நான் அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறேன் என்றுவர், கிட்டத்தட்ட 20 கட்சிகளுடன் ஒரு கூட்டணியை வாஜ்பாய் வெற்றிகரமாக நடத்தினார். அப்போது  எல்லோருக்கும் மரியாதை வழங்கப்பட்டதால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர் … அவர்கள் மரியாதையாக நடத்தப்பட்டனர். வாஜ்பாய்-ஜியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தன … கூட்டணி கட்சியினரின் ஆலோசனைகள்  கேட்கப்பட்டது என்று கூறியவர், அந்த பாடங்களைக் கற்றுக்கொண்ட ஒரே பாஜக தலைவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்த அருண் ஜெட்லி மட்டுமே என்றார்.

அருண்ஜெட்லி உயிருடன் இருந்தவரை, கதவுகள்  எப்போதுமே திறந்தே இருந்தன என்றவர்,  துரதிர்ஷ்டவசமாக, அவரது மறைவுக்குப் பிறகு,  உண்மையில் அந்த கதவுகள் செயல்படவில்லை என்று பாஜக தலைமையை கடுமையாக சாடினார்.

நாங்கள்  யாரும் உண்மையில் மகிழ்ச்சியாக இல்லை … கூட்டணி கட்சிகளின் கூட்டங்கள்  அவ்வப்போது நடைபெறாமல் இருப்பது, தங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றவர், குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், “என்று அவர் கூறினார்.

அண்மையில் நிகழ்ந்து வரும்  தேர்தல் மாற்றங்கள் – மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் போன்றவை – கட்சி முன்னர் கூறிய நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகிச் சென்றதால் இருக்கலாம் என்று தெரிவித்தவர், கடந்த நாங்கள் 2014 இல் ஒரு பொருளாதார நிகழ்ச்சி நிரலில் தேர்ந்தெடுக்கப்பட்டோம், அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் அல்லது முக்கியமாக வேலைகள் என தங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற முடியும் என்று இந்திய மக்கள் இன்னும் உணர்கிறார்கள். எனவே மத்திய அரசு மீண்டும் பொருளாதாரத்தில் தீவிர கவனம் செல்ல வேண்டும், “என்றும் வலியுறுத்தினார்.

அகாலிதளம் கட்சித் தலைவரின் இந்த எச்சரிக்கை, பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.