டெல்லி:
உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டு உள்ளது. 10ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட இந்த சிகிச்சை மையம் 10 நாட்களில் அமைக்கப்பட்டது. இந்த சாதனைக்குரிய சிகிச்சை மையத்தை டெல்லி ஆளுநர் அனில் பஜாஜ் இன்று திறந்து வைத்தார்.
கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலில் முதலிடத்தி மகாராஷ்டிரா மாநிலமும், 2வது இடத்தில் தமிழகமும் உள்ளது. 3வது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.
டெல்லியில் இன்று புதிதாக 2244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத்தொடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99444 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 63 பேர் உயிரிழந்தை யடுத்து, மொத்த பலி 3067ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 71,339 பேர் குணமடைந்துள்ளனர். 25038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் நாடு முழுவதும் ஜூலை மாதம் தொற்று பரவல் தீவிரமாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக டெல்லியில், நோயாளிகள் மற்றும் தொய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படும் வகையில், 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட பிரமாண்டமான, உலகிலேயே பெரியதான மருத்துவ சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.
டெல்லியின் உள்ள சத்தர்பூர் பகுதியில் 10 நாட்களில் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட இந்த சிகிச்சை மையத்துக்கு சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் என பெயரிடப்பட்டு உள்ளது.

1700 அடி நீளம் மற்றும் 700 அடி அகலம் அளவிலான இந்த மையமானது, 20 கால்பந்து விளையாட்டு மைதானங்களின் அளவில் பெரியது. இங்கு 50 படுக்கைகள் வீதம் 200 அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள படுக்கைகளில் 10 சதவிகிதம் ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி கொண்டவை .
லேசான மற்றும் அறிகுறியற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தும் வசதியில்லாதவர்களும் இங்கே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க விளையாட்டு வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க மனநல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
10ஆயிரம் படுக்கைகள் கொண்ட உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் இன்று திறந்து வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மருத்துவமனையில், மருத்துவர்களுடன் சேர்ந்து, 2,000 க்கும் மேற்பட்ட இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி) மற்றும் பிற மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) பணியாளர் களும் சிகிச்சை அளித்து நிர்வகிப்பார்கள் என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரமாண்டமான கொரோனா சிகிச்சை மையத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டிஆர்டிஓ தலைவர் ஜி சதீஷ் ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்