டெல்லி:

கேரளா திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சசி தரூர். 61 வயதாகும் இவர் வெளியுறவு விவகார துறை குழுவிலும் இடம்பெற்றுளார். இவர் அல் ஜகிரியா என்ற இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், ‘‘கொலைக்கார ஆட்சி நடத்தி இந்தியாவை ஏழ்மை, கல்லாமை, நோயுற்ற நாடாக ஆங்கிலேயேர்கள் மாறறினர். இதை விளக்கும் வகையிலான அருங்காட்சியகம் லண்டனிலும், இந்தியாவிலும் ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் லட்ச க்கணக்கான இந்தியர்களை கொன்று குவித்தனர். வறுமை மிகுந்த நாடாக மாற்றி பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடித்தனர். இதை பள்ளி குழந்தைகளுக்கு நினைவுபடுத்த வேண்டும்.

1700ம் ஆண்டிலேயே உலகின் மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 27 சதவீதமாக இருந்தது. அப்போதே பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருந்தது. இதை பிரிட்டன் ஆட்சியாளர்கள் குறைத்துவிட்டனர். 2 நூற்றாண்டுகளில் இந்தியாவை கொள்ளையடித்தும், சுரண்டியும் மிகவும் ஏழ்மை மிகுந்த, நோயுள்ள, கல்லாமை மிகுந்த நாடாக பூமியில் மாற்றிவிட்டு சென்றுவிட்டனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த கட்டுரையில், ‘‘இந்திய பள்ளி மாணவர்களுக்கு இதை நினைவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதோடு பிரிட்டன் சுற்றுலா பயணிகளும் இதை அறிய செய்ய வேண்டும். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை அறியாவிட்டால், இப்போது அடைந்திருக்கும் நிலையை பாராட்ட முடியாமல் போய்விடும்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததை எடுத்து கூறும் வகையில் ஒரு அருங்காட்சியகம் கூட ஏற்படுத்தப்படவில்லை. அதனால் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தை ஆங்கிலேயரின் அராஜக ஆட்சியை எடுத்துக் கூறும் வகையில் அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‘‘ஆங்கிலேயருக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய 379 முதல் ஆயிரம் இந்தியர்களை அமிர்தசரஸில் கொன்று குவித்தனர் ஆங்கிலேயே வீரர்கள். பிரிகேடியர் ரெஜினால்டு டையரின் ஒரு உத்தரவால் 10 நிமிடத்தில் ஆயிரத்து 100 பேர் படுகாயமடைந்தனர். அதன் பின்னர் இவர் ஹீரோவாக பிரிட்டன் மக்கள் மத்தியில் சித்தரிக்கப்ப்டடார்.

ஆங்கிலேயரின் கொள்கையால் 35 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் இறந்ததையும், பிரித்தாளும் சூழ்ச்சியில் சிக்கி பலர் பலியானதையும் எடுத்துக் கூறும் வகையில் ஒரு நினைவிடம் கூட ஏற்படுத்தப்படவில்லை. பிரிவினையின் பயங்கரத்தை 1947ம் ஆண்டு இந்திய துணை கண்டத்தில் ஆங்கிலேயர்கள் வெளிப்படுத்தினர்’’ என்று சசிதரூர் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

சசிதரூர் மேலும் அந்த கட்டுரையில், ‘‘அருங்காட்சியகங்கள் ஏற்படுத்தாத காரணத்தால் இது போன்றவை வெளியில் தெரியாமல் உள்ளது. காலணித்துவ ஊழலுக்கு ஏற்றவாரு இந்தியன் ரெயில்வே, ஆங்கிலேயர்கள் பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இறுதியில் இந்தியர்கள் பெயரில் சிறிய குடில்களை அமைத்துக் கொண்டு ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டனர். ஓரினச் சேர்க்கை இ ந்தியாவில் மட்டும் இல்லாமல் போனது. இதற்கு நாட்டின் பழங்கால ஹிந்து மத கோட்பாடுகள் தான் காரணம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.