சென்னை

சேப்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி ஒரு மாடு இறந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் – சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்று பகல் சுமார் 12.30 மணி அளவில் கூட்டமாக சில எருமை மாடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன.    அப்போது அங்கு வந்த பறக்கும் ரெயில் எருமைகள் மீது மோதி உள்ளது.   ஒரு மாடு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது.   அத்துடன் மூன்று எருமைகள் கவலைக்கிடமாக உள்ளன.

சென்னை பூங்கா நகர் தாண்டியதுமே பறக்கும் ரெயில் குறுகலான பாலத்தில் பயணம் செய்யும்.   தண்டவாளத்துக்கும் தடுப்புச் சுவருக்கும் இடையில் மிகக் குறுகிய இடைவெளியே இருக்கும்.   இதனால் காயமடைந்த எருமைகளை அகற்றுவதில் சிக்கல் நிலவுகிறது.    அத்துடன் அவ்வளவு குறுகிய இடைவெளியில் சென்று முதலுதவி அளிப்பதும் மிகவும் கடினமாக உள்ளது.

[youtube-feed feed=1]