டில்லி:
மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர், 2024-ம் ஆண்டுக்குள் ‘ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்து உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார்.
அதில், தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது மிகவும் முக்கியமான குறிக்கோள் என்று கூறியுள்ளவர் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க தான் புதிதாக ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் குழாய் மூலமாக குடிநீர் அளிப்பதற்கு 2020ஆம் ஆண்டுக்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
2024 ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இதற்காக ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.