சென்னை;

மிழக அரசின் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், இன்றைய பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த திமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்ட அணிந்து வந்தனர்.

இதுகுறித்து திமுக எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இன்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில,  தி.மு.க சட்டமன்ற  கறுப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

கறுப்பு சட்டை அணிந்து வந்தது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் செய்யும்  மத்திய அரசை கண்டித்தும்,  பெரும்பான்மை இல்லாத முதலமைச்சர் பழனிசாமி அரசு, பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான  கறுப்பு சட்டை அணிந்து வந்தாக கூறினார்.

தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார்.