புதுச்சேரி:
புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டம் ஆரம்பமானது. முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் விவரம் வெளியாகி விட்டதாக கூறி என்ஆர் காங் .அதிமுக வெளி நடப்பு செய்தன.
பட்ஜெட் விபரம் ஏற்கனவே வெளியாகி விட்டதாக அதிமுக புகார் கூறியது. அதைத் தொடர்ந்து அதிமுக..என்.ஆர்.காங் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் துளிகள்:
பட்ஜெட் உரை வீடியோ எடுக்க டிவிக்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
புதுச்சேரி ..பட்ஜெட். தொகை விபரம்.6,665…திட்டமில்லா செலவு 4,100…திட்ட செலவு 2,565 கோடி..முதல்வர் நாராயணசாமி தகவல்
நெல்லித்தோப்பு ,இருதயஆண்டவர்.வில்லியனுர் ஆகிய தேவாலயத்திற்க்கு தலா ஒரு கோடி ரூபாய், அழகு படுத்த ஒதுக்க பட்டு உள்ளது
புதுச்சேரி, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக உயர்வு
.புதிய துறைமுகத்தை மேம்படுத்த 15 கோடி மத்திய அரசிடம் பெறப்பட்டு சரக்கு போக்குவரத்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி.. காரைக்கால் திருநள்ளாறில் 6 கோடி ரூபாய் செலவில் அறிவியல் கோலரங்கம் அமைக்கப்படும்.
புதுச்சேரி ..பட்ஜெட். தொகை விபரம்.6,665…திட்டமில்லா செலவு 4,100…திட்ட செலவு 2,565 கோடி..முதல்வர் நாராயணசாமி தகவல்
புதுச்சேரி ..புதுச்சேரி கடன் தொகை 6551 கோடி..ஆண்டிற்கு அசலும் வட்டியும் சேர்த்து 700 கோடி செலுத்தப்படுகிறது..முதல்வர் தகவல்
புதுச்சேரி.. எல்டி பல்புகள் மீதானா வாட் வரி 8 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைப்பு.
வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் ஹெல்மெட் விற்பனைக்கு வரிவிலக்கு..முதல்வர் அறிவிப்பு
புதிய சில்லரை மதுபான கடைகளுக்கு அனுமதி.
Patrikai.com official YouTube Channel