டில்லி:

பட்ஜெட்டில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.6,602.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இது 3 மடங்கு அதிகமாகும். இதில் ரூ.4,469.50 கோடி செலவில் விவிஐபி.க்கள் பயணிக்க போயிங் ரக விமானங்கள் 2 வாங்கப்படும்.

பிராந்திய விமான இணைப்பு திட்டங்களுக்கு ஆயிரத்து 14 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏர்-இந்தியாவுக்கு உதவிட கடந்தாண்டு ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இது ரூ.650 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.