டெல்லி:

ட்ஜெட்டியில் விவசாயிகள் குறித்து பேசும்போது,  “பூமி திருத்தி உண்” அவ்வையாரின் ஆத்திச்சூடியை நினைவுபடுத்தினார் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 2வது பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இந்திய மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாகவும்,  இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவானதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியா விவசாயத் துறையைக் குறித்து பேசிய நிதி அமைச்சர், “பூமி திருத்தி உண்” என்ற  ஔவையாரின் கருத்தை முதன்மை படுத்தினார். பூமி திருத்தி உண் என்ற மூன்று வார்த்தையில் விவசாயத்தின் மகத்துவத்தை ஔவையார் கூறியுள்ளார். எனவே நிலத்தை பயனுள்ள வகையில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதன் பொருள் ஆகும் என்றார் நிர்மலா.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, புறநாநூற பாடலை குறிப்பிட்டு பேசிய நிர்மலா, தற்போது அவ்வையாரின் முதுமொழியை கூடியிருப்பது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.