டில்லி:

த்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,  விக்கிபீடியா போல, காந்திபீடியா உருவாக்கப்படும் என்று கூறினார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து இன்று பேசிய அவர், மகாத்மா காந்தியை பற்றி அனைவரும் முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் விக்கிபீடியா போல, காந்திபீடியா உருவாக்கப்படும்.

கல்வித்துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும்.

ரோபடிக்ஸ் போன்ற நவீன துறைகளில் இந்திய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்

இந்தியாவின் உயர்கல்வியை உலக தரத்திற்கு மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பபட்டுள்ளது.

கல்வியில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள புதிய அமைப்பு உருவாக்கப்படும்

5 ஆண்டுகளுக்கு முன் உலக தரவரிசையில் முதல் 200 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இல்லை; தற்போது 3 கல்வி நிறுவனங்கள் உள்ளன

‘மரபுசார் தொழிற்பயிற்சி மட்டுமின்றி 3டி அனிமேசன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படும்.