சென்னை:
தமிழக அரசின் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
சட்டசபை கூட்டம் தொடங்கியதும், திமுக எம்எல்எக்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.
இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி,
பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக உயரும்
நடப்பாண்டில் ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு
கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,227 கோடி
பால்வளத்துறைக்கு ரூ. 130 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு
வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.71 கோடி ஒதுக்கீடு
மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு
வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு
தஞ்சை தமிழ் பல்கலை.யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்பட்டு, ஆண்டு மானியமாக ரூ.2 கோடி வழங்கப்படும்
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி ரூ.1500-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்வு
காவல்துறைக்கு ரூ.7,877 கோடி ஒதுக்கீடு. காவல்துறைக்காக 35 கட்டடங்கள், 15 காவல் நிலையங்கள், 543 குடியிருப்புகள் கட்டப்படும்
தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு
கடலூர், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும்
நபார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
ரயில்வே பணிகள் திட்டத்துக்கு ரூ.513.66 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.482.84 கோடி
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.482.84 கோடி
2017 ஜூலை முதல், 2018 பிப். வரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.632 கோடி பெறப்பட்டுள்ளது
மாநில போக்குவரத்து கழகங்களுக்காக புதிதாக 3 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும்
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு
பசுமை வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடியில், 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்
கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமைப்பூங்கா அமைக்கப்படும்
ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப்படும்
மெட்ரோ ரயிலின் 107.55 கி.மீ. நீள வழித்தடம் அமைக்க மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியை எதிர்நோக்கி மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு
மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2 =வது மாநிலம் தமிழகம்.
சென்ற 2017-18ஆம் ஆண்டுக்கு ரூ. 10,158 கோடி ஒதுக்கப்பட்டது தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ. 11,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வித்தியாசம் ரூ. 1480 கோடியாக உள்ளது
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும்
தமிழகத்தில் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்
மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் ரூ.70 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்
விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி
இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு
பழங்குடியினர் நலத்துறைக்காக ரூ.333.82 கோடி
நெடுஞ்சாலை துறைக்கு ரூ.11,073.66 கோடி ஒதுக்கீடு
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் தயாரிக்கும் பணிகள் துவக்கம்
ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி இடையே சாலையை 4 வழி சாலையாக்க திட்டம்
செங்கோட்டை- கொல்லம் இடையில் 45 கி.மீ. சாலையை அகலப்படுத்தும் பணி துவக்கம்
110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம்
சமூக நலத்துறைக்கான தமிழக பட்ஜெட்டில் ரூ.5,611.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
இலங்கைத் தமிழ் அகதிகளின் நலத் திட்டங்களுக்கு ரூ.109. 42 கோடி
நீர்வளத்தை மேம்படுத்த ரூ.1000 கோடியில், தடுப்பணைகள் கட்டப்படும்
விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.490.45 கோடி
வருவாய் துறைக்கு ரூ.6,144.58 கோடி ஒதுக்கீடு
சத்துணவு திட்டம்- ரூ. 1,747.72 கோடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு ரூ. 2,146.30 கோடி ஒதுக்கீடு
பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.2,658.58 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்
உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.172 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு(GSDP) ரூ.16,89,459 கோடியாக உயரும் எனக் கணிப்பு
எண்ணூர்- தச்சூர், வடக்கு துறைமுக அணுகு சாலையை அமைக்க ரூ.200.60 கோடி ஒதுக்கீடு
ரூ.1,000 கோடியில் 2500 கிலோமீட்டர் ஊரக சாலைகள் அமைக்கப்படும்
ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும்
1000 கிலோமீட்டர் சாலைகள் அகலப்படுத்தப்படும்
ஒரு டன் கரும்புக்கு ரூ.2,750 விவசாயிக்கு அளிக்க முடிவு
500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளுக்கு சாலை வசதிகள்
26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்க திட்டம் : ரூ.920 கோடி ஒதுக்கீடு
ரூ.1 கோடி மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையம்
எரிசக்தி துறைக்கு ரூ.13,967.08 கோடி ஒதுக்கீடு