டில்லி,

ன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், விவசாயம் மற்றும் விவசாயிகளின் வறுமையை போக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிக நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் கிராமப்புறங்களில் ஏழ்மை ஒழிய வழிவகை செய்யப்படுள்ளது

சிறுகுறு விவசாயிகள் எளிதில் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2017- 18 நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு சுமார் ரூ. 9 லட்சம் கோடி வழங்கப்பட்டது.

குறைந்த வட்டியில் கடன் வழங்க மத்திய அரசின் பணமதிப்பிழப்பு வழிவகை செய்யும்.
தேசிய வேளாண் சந்தைகளின் கீழ் ஒருங்கிணைப்பு சந்தைகளின் எண்ணிக்கை 558 ஆக உயர்த்தப்படும்.

நடப்பு நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும்.

பயீர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு ரூ.5.500 கோடி ஒதுக்கப்பட்டது.

தேசிய வேளாண் சந்தையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் சந்தைகளின் எண்ணிக்கை 559 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு நிலுவை தொகை வழங்க ரூ.9000 கோடி ஒதுக்கீடு

ஊரக மற்றும் வேளாண் துறைக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு ஊரக வேளாண் வளர்ச்சிக்கு187,223 கோடி ஒதுக்கீடு
நுண்ணீர் பாசனத்திற்கு நபார்டு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் கோடி

தீன் தயாள் யோஜனா திட்டத்திற்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு