டில்லி,

ன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது,

இந்த பட்ஜெட்டில் நாங்கள் சரவெடிகளை எதிர்பார்த்தோம்… ஆனால் புஷ்வானம் தான் கிடைத்துள்ளது என்றார்.

மேலும் பட்ஜெட்டில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை.

ரெயில் பாதுகாப்பு அம்சங்கள் மோசமாக உள்ளன. அதுகுறித்து நிதிமந்திரி எதுவும் சொல்லவில்லை.

பிரதமர் கூறிய புல்லட் ரெயில் திட்டமும் இல்லை. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் இல்லை.

விவசாயிகளுக்கோ, இளைஞர்களுக்கோ எந்த அறிவிப்பும் இல்லை. நாங்கள் சரவெடி போன்ற அதிரடி அறிவிப்புக்களை எதிர்பார்த்தோம். ஆனால் புஷ்வாணம் தான் கிடைத்துள்ளது.

அரசியல் நன்கொடை முறையை சரிசெய்யும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் ஆதரிப்போம்.

இந்த பட்ஜெட் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.