பாங்க்காக்: பாங்க்காக்கிற்கு தெற்கே அமைந்திருக்கும் ஒரு புத்த கோயிலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலியஸ்டர் இழைகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இது பின்னர், இங்குள்ள துறவிகளுக்குக் குங்கமப்பூ நிற அங்கிகளுக்குத் துணியாக மாற்றப்படும்.
வாட் சக் டேங்கின் மறுசுழற்சி கோயில் மறுசுழற்சியில் தாய்லாந்திற்கே ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உலகில் உள்ள பெருங்கடல்களில் இருக்கும் பிளாஸ்டிக்கிற்குக் காரணமான ஐந்து நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து உள்ளது.
மற்ற புத்த கோயில்களில் உள்ள பத்த துறவிகளுக்கு மக்கள் உணவு மற்றும் உடைகளை வழங்காமல், தங்கள் சைக்கிள்களில் வந்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களைத் தந்து அதற்கு பதிலாக துறவிகளின் ஆசிகளைப் பெற்றுச் செல்கிறார்கள்.
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தாய்லாந்தின் வளைகுடாவுக்குத் தெற்கே பாயும் சாவே ஃபிராயா நதியில் நுழையும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் இரண்டு ஆண்டுகளில் துறவிகள் 40 டன் பிளாஸ்டிக்கை நசுக்கியுள்ளனர்.
இந்த கோயில் குறைந்தது 800 செட் ஆடைகளை உற்பத்தி செய்துள்ளது, மேலும் பல செட் ஆடைகள் உற்பத்தி நிலைகளில் உள்ளது.
இந்த ஆடைகளை விற்ற பணத்தை இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்வதற்கும், கழிவுகளை பிரித்து வரிசைப்படுத்தும் தன்னார்வலர்களுக்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவர்களில் பலர், உள்ளூர் இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஊனமுற்றோர் ஆவர்.
“மறுசுழற்சிக்குத துறவிகள் தங்கள் உறுதியான பங்களிப்பை வழங்குவது மட்டுமின்றி, அவர்கள் தாங்கள் சார்ந்த சமூகங்களில் பிளாஸ்டிக்கின் தீமை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்கள்“, என்று ஓஷன் கன்சர்வேன்சியில் பிளாஸ்டிக் முன்முயற்சிகளின் இயக்குநர் செவர் வால்ட்மர் கூறினார்.