பிஸ்தலம்

ஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஒரு புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம் ஆகும்.  நேற்று அதிகாலை கொள்ளிடம் ஆற்றில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்பொழுது கொள்ளிடம் ஆற்றின் நடுவில் மணல் திட்டு பகுதியில் கருங்கல்லிலான பழங்கால புத்தர் சிலை இருந்து இந்த சிலையை மீனவர்கள் மீட்டனர். சிலை 4 அடி உயரம் கொண்டுள்ளது. புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது.

சிலையைக் கண்ட மீனவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜிடம் தெரிவித்தனர்.  சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிலையைப் பார்வையிட்டனர்.

அதிகாரிகள் புத்தர் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.  புத்தர் சிலை எங்கிருந்து வந்தது? கொள்ளிட ஆற்றின் மணல் பகுதியிலேயே புதைக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கபிஸ்தலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்,