புனே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதல் போட்டியைப் போலவே, இரண்டு அணிகளிலும் சகோதரர்கள் இடம்பெற்றனர்.

ஆனால், முதல் போட்டியில் இல்லாத ஒரு அம்சம் இரண்டாவது போட்டியில் இருந்தது. ஏனெனில், முதல் போட்டியில் இந்தியாவின் பாண்ட்யா சகோதரர்கள் இருவரும், ஒரேநேரத்தில் பேட்டிங் ச‍ெய்யவில்லை. வெவ்வேறு நேரத்தில்தான் பேட்டிங் செய்தனர்.

ஆனால், இன்றையப் போட்டியில், இரண்டு சகோதரர்களும் ஒரேநேரத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அமைந்தது. அதேநேரத்தில், எதிர்முனையில், இங்கிலாந்தின் கர்ரன் சகோதரர்கள் அடுத்தடுத்து இந்த சகோதரர்களுக்கு பெளலிங் செய்யும் சந்தர்ப்பமும் அமைந்தது. இதுதான் இன்றையப் போட்டியின் சுவாரஸ்யமே..!

கர்ரன் சகோதரர்களின் பவுலிங்கை, பாண்ட்யா சகோதரர்கள் நன்றாக அடித்து ஆடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியையும் சேர்த்து, இதுவரை, சர்வதேச ஒருநாள் வரலாற்றில், மொத்தமாக 6 முறைகள், ஒரே போட்டியில், இரு அணிகளிலும் சகோதரர்கள் இடம்பெற்றுள்ளனர்.