லண்டன்:
பிரிட்டனில் நேற்று தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஜோ காக்ஸ்ஸை கொலை செய்தவன் நவ நாஜி இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பிரிட்டனில் வலதுசாரி பயங்கரவாதம் தலையெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் அஞ்சுகிறார்கள். பிரிட்டனில் பதட்ட நிலை தொடர்கிறது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தீர்மானித்துள்ளது இது குறித்து மக்களின் கருத்தை அறிய வரும் 23ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதே நேரம், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியினர், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரியக்கூடாது என பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி. ஜோ காக்ஸ் (வயது 41) பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுட்டப்பட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவேண்டும் என்று குரல் கொடுத்து வருவபர்.
ஜோகாக்ஸை கொலை செய்த 52 வயது வெள்ளையினத்தவரை காவல்துறை கைது செய்தது. அப்போது அந்த நபர் “Britain First” ( பிரிட்டன்தான் உலகிலேயே முதன்மையான நாடு) என்று ஆக்ரோசமாக குரல் எழுப்பியபடியே இருந்தார்.
அவர், National Alliance என்ற நவ நாஜி இயக்க ஆதரவாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர், துப்பாக்கி தயாரிப்பது எப்படி என்ற செயல் விளக்க கைநூலை இணையம் மூலம் வாங்கியிருக்கிறார்.
ஆனால் பெரும்பாலான பிரிட்டிஷ் ஊடகங்கள் அந்த நபரை மனநிலை சரியில்லாதவர் என்று குறிப்பிடுகின்றன.
இதற்கிடையே பிரிட்டிஷ் பிரதமர் கேமருன் உட்பட அரசியல் தலைவர்கள் தங்களது பிரச்சார பயணங்களை தள்ளிவைத்துள்ளனர். பிரிட்டன் முழுதும் பதட்ட நிலை நிலவுகிறது.
கொலை செய்யப்பட்ட ஜோ காக்ஸ்ஸூக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்.