2
நெட்டிசன்: 
சுபாஷ் கிருஷ்ணசாமி   (Subash Krishnasamy )அவர்களின் முகநூல் பதிவு:
த்தலப்ப நாயக்க வம்சாவளியினர் 16 பேர் தளி பாளையப்பட்டு பகுதியைப் பெரிய பாளையமாக அமைத்து, கோட்டை கட்டி ஆண்டு வந்தனர்.
கி.பி. 1799-இல் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, 1801 பிப்ரவரி 2-இல் மீண்டும் நடைபெற்ற ஆங்கிலேயருக்கு எதிரான பாஞ்சாலக்குறிச்சிப் போரில் ஊமத்துரைக்கு ஆதரவாக 14 பாளையக்காரர்கள் தலைமையில் தளி பாளையமும் போர்க்களத்தில் இறங்கியது.
14520499_1799777476929509_4711566681593398016_n
அப்போரின்போது எத்தலப்பனின் தந்தை இறந்துவிட்டார். அதையடுத்து எத்தலப்பன் அரசரானார். அவர், தனது படையுடன் ஊமத்துரைக்கு ஆதரவாகப் போரிட்டார். போரின் இறுதியில் ஊமத்துரை தோல்வியைத் தழுவ, பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.   அதன்பிறகு 14 பாளையக்காரர்களைக் கொண்ட கூட்டு இணையை ஏற்படுத்தி தலைமை ஏற்று, வலிமை வாய்ந்த பாளையமாக விளங்கிய எத்தலப்ப நாயக்கனை அடக்குவதற்காக ஆங்கிலேயர் ஒரு தூதுக்குழுவை அனுப்பினர்.
பறங்கியர் படையெடுத்து வந்துவிட்டதாகக் கருதிய எத்தலப்ப நாயக்கர், தனது வீரர்களை ஏவி ஆங்கிலேயத் தூதுக்குழுத் தலைவரை மட்டும் தனியே கைது செய்து அவரைத் தூக்கிலிட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் புதைக்கப்பட்ட இடத்திலுள்ள, இதுவரை படிக்கப்படாமல் கிடந்த கல்வெட்டு பல புதிய தகவல்களை அளித்துள்ளது.
1
தளியில், தேவராய நாயக்கர் தென்னந்தோப்பில் (இது தான் தூக்குமரத் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது) 10 அடிக்கு 12 அடி கொண்ட கம்பி வேலியிடப்பட்ட இடத்தில் உள்ள சமாதியின் மேல் இந்தக் கல்வெட்டு படுக்கை வசத்தில் உள்ளது.
இக்கல்லறையின் மேல்பகுதியில் சிலுவை போன்ற கல் வடிவம் உள்ளது.
“அந்திரை கெதி’ அல்லது “அங்கிரை கெதி’ என்ற பறங்கியன் தஞ்சையில் இருந்து வந்தவன், கி.பி. 1801-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி தனது 27 வயதில் அடக்கம் செய்யப்பட்ட சமாதி என்று, இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.