ண்டன்

காஷ்மீர் வம்சாவழியை சேர்ந்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் காலித் முகமது இந்தியப் பிரதமர் மோடிக்கு கத்துவா பலாத்கார விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளா

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் காலித் முகமது.   இவர் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர்.    தற்போது பிர்மிங்காம் தொகுதியில் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஆவார்.   இது வரை ஐந்து முறை அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.    அத்துடன் வெளிநாட்டு உறவுத் துறை அமைச்சகத்தையும் கவனித்து வருகிறார்.

காலித் முகமது சமீபத்தில் அளித்த பத்திரிகை பேட்டி ஒன்றில், “காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் ஒரு எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது.   இதனால் உலக மக்கள் அனைவருமே இந்தியா மீதும் இந்தியப் பிரதமர் மோடி மீதும் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.   அவர் அடுத்த முறை இங்கிலாந்து வந்தால் மக்கள் அவரை மதிக்க மாட்டார்கள்.   அவருக்கு மரியாதை அளிக்க மாட்டார்கள்.   இந்தியா உலக அரங்கில் முன்னணியில் இருக்க வேண்டும் எனில் ஜனநாயகம் அவசியம் ஆகும்.

மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயக வாதி என்றால் சட்டத்தை மதிக்க வேண்டும்.   உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு உங்கள் செய்கையால் அவமரியாதையை தேடிக் தருகிறீர்கள்.   ஜனநாயகத்தில் காணப்பட வேண்டிய வெளிப்படைத் தன்மை உங்களிடம் இல்லை.   பலாத்காரத்தின் தலைநகர் இந்தியா என ஆகி விட்டது..   பலாத்கார குற்றவாளிகளுக்கு எந்த தண்டனையும் உங்கள் அரசு அளிக்கவில்லை.  இதனால் மேற்கத்திய நாடுகளில் இந்தியாவுக்கு மிகவும் அவப்பெயர் உண்டாகி உள்ளது.

மொத்தத்தில் இந்தியா என்பது பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என ஆகி விட்டது.   காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் நடந்த்அ 8 வயது சிறுமியின் பலாத்காரப் படுகொலையினால்  மக்கள் இந்தியர்களை மிகவும் வெறுக்கிறார்கள்.   அந்த சிறுமி என்ன பாவம் செய்தாள்? அவளுக்கு உயிர் வாழும் உரிமை இல்லைய? இஸ்லாமியப் பெண்களுக்கு இந்தியாவில் மதிப்பு இல்லையா?  இதன் மூலம் காஷ்மீர் மக்களையே அடக்கி ஒடுக்க உங்கள் மத்திய அரசு முடிவு செய்துள்ளதா?”  என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த பேட்டிக்கு சில மணி நேரம் முன்பு கத்துவாவில் நடந்த சிறுமி பலாத்காரக் கொலைக்கு ஐநா சபை செயலர் ஆண்டானியோ கட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.