லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ், தனது விமான பணி ஆண்களுக்கான ஆடைகளை மாற்றி உள்ளது. அதன்படி புதிய சீருடையாக  பாவாடைகள் மற்றும் காலுறைகளுடன் புதிய பாலின நடுநிலை சீருடையை வெளியிட்டுள்ளது. ஆனால், இது  மிகவும் மலிவான செயல் என பெண் விமானப் பணிப்பெண்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கடந்த ஜனவரி மாதம் புதிய சீருடையை வெளியிட்டது. அப்போது, விமானப் பணிப்பெண்கள் டூனிக், ஜம்ப்சூட் மற்றும் தலையில் முக்காடு அணியக்கூடிய நவீன உடை போன்றவற்றை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது, பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆண்களுக்கான ஆடைகளாக, பெண்கள் அணிவதுபோன்ற பாவாடைகள் மற்றும் காலுறைகளுடன் புதிய சீருடையை வெளியிட்டு உள்ளது. இது  பாலின நடுநிலை சீருடை என தெரிவித்து உள்ளது.  சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் ஆடை வடிவமைப்புகளை மாற்றி உள்ளது.

ஏற்கனவே ஜனவரி 2023ல், பிரிட்டிஷ் ஏர்வேஸில் புதிய சீரூடையா, ஹிஜாப் மற்றும் ஜம்ப்சூட் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவித்தது.  அதன்படி,  விமானப் பணிப்பெண்கள் டூனிக், ஜம்ப்சூட் மற்றும் தலையில் முக்காடு அணியக்கூடிய நவீன உடை, விமான சேவைக்கு அணிய அனுமதி வழங்கியது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் 2004 முதல் அதன் தோற்றத்தை  மாற்றாமல் இருந்து வந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மறுவடிவமைப்பு செய்துள்ளது.  ஏற்கனவே ஜனவரியில் பெண்களுக்கான சீருடைகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது, ஆண்களுக்கான சீருடைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி,   ஆண்கள் வழக்கமாக அணியும், மெலிதான கால்சட்டை மற்றும் பெண்கள் பாவாடை அல்லது கால்சட்டை அணிவதற்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மூன்று-துண்டு சூட் கொண்டுள்ளது. அத்துடன்  ஒரு ட்யூனிக் மற்றும் ஹெட்ஸ்கார்ஃப் விருப்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் இணையதளத்தின்படி, பிஏ தலைவரும் தலைமை நிர்வாகியுமான சீன் டாய்ல், “எங்கள் சீருடை என்பது எங்கள் பிராண்டின் சின்னமான பிரதிநிதித்துவம், இது நம்மை எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும், நவீன பிரிட்டனின் சிறந்ததை பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் அற்புதமாக வழங்க உதவுகிறது. என்று தெரிவித்து உள்ளார்.

முன்னதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், சரக்கு விமானங்களில் கடந்த 6மாதங்களாக ஊழியர்கள் சீருடைகளை ரகசியமாக சோதனை செய்து வந்ததாகவும், அந்நிறு வனத்துக்கு சொந்தமான  50 பணிமனைகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த சீருடைகளை அணிய வைத்து கருத்துக்களை பெற்று, ஆடை வடிமைக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த சீருடை விமான ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  இது மிகவும் மலிவான செயல் என பெண் விமானப் பணிப்பெண்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.