லண்டன்:

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஜுலை 23-ம் தேதி அறிவிக்கப்படுவார் என கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.


ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது 2016-ல் இங்கிலாந்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது 2016-ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பிரெக்ஸிட் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மார்ச் மாதத்துக்குள் கொண்டு வர தீர்மானம் செய்யப்பட்டது.

அதன்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளைக் கொண்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் உருவானது.

இதற்கான முயற்சிகளை பிரதமராக இருந்த தெரசா மே மேற்கொண்டார். ஆனால், நாடாளுமன்றத்தில் 3 முறையும் பிரெக்ஸிட் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

தெரசா மே கட்சியினரே தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

இதற்கிடையே,   கன்சர்வேட்டிவ் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், தெரசா மே பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரீஸ் ஜான்சன் அல்லது ஜெர்மி ஹன்ட் ஆகியோரில் ஒருவர் ஜுலை 23-ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவர் என  அறிவித்துள்ளது.

1,60,000 தபால் வாக்குகள் அல்லது கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தெரசா மேவுக்கு பதில் யாரை பிரதமராக தேர்வு செய்வது என்பது குறித்து ஜுலை 22ல் முடிவு செய்வர் என்றும், மறுநாள் பிரதமர் பதவிக்கு வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.