ண்டன்

க்ரைன் நாட்டில் நடைபெறும் போரில் இழப்புக்கள் அதிகரிப்பதால் ரஷ்யப்படைகள் தள்ளாடி வருவதாகப் பிரிட்டன்  தெரிவித்துள்ளது.

ரஷ்யா கடந்த 21 நாட்களாக உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது.   இந்த போரில் ரஷ்யப்படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன.  ரஷ்யப்படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது.   போர் நிறுத்தம் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன.

ரஷ்யாவுக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   ரஷ்ய அதிபர் புதினை போர் குற்றவாளி என அறிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு தீர்மானம் இயற்றி உள்ளது.   வழக்கமாக நாடாளுமன்றத்தில் எந்த ஒரு தீர்மானத்துக்கும் பல எதிர்ப்புகள் எழும் நிலையில் இந்த தீர்மானம் முதல் முறையாக ஏக மனதாக நிறைவேறி உள்ளது.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம்,

“ரஷ்ய ராணுவம்  உக்ரைன் தாக்குதலில் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து படை வீரர்களைக் கொண்டுவந்து போரில் ஈடுபடுத்த முயன்று வருகிறது.  அண்மைத் தகவலின்படி  சண்டையிட ரஷ்யா மிகவும் திணறி வருகிறது. உக்ரைனின் நிலையான பதிலடியால் நாளுக்கு நாள் ரஷ்யாவுக்குச் சவால் அதிகரித்துள்ளது”

என்று தெரிவித்துள்ளது.