ண்டன்

ர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வு ஒன்றுக்கு பிரிட்டன் அரசு தகவல் ஒழுங்குத்துறை 20000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வுகள் பலவற்றுக்கு தொடர்ந்து மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  இந்த நிகழ்ச்சிகள் பலவற்றிலும் விரும்பத்தகாத வார்த்தைகள் இடம் பெறுவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதுவரை இந்த குற்றச்சாட்டு இந்திய அளவில் இருந்த நிலையில் தற்போது இதே குற்றச்சாட்டு சர்வதேச அளவில் கூறப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்ம் 6 ஆம் தேதி அன்று ரிபப்ளிக் டிவியின் ’பூச்தா ஹை பாரத்’ என்னும் நிகழ்வு பிரிட்டனில் ஒளிபரப்பானது.  இந்த நிகழ்வில் நிலவுக்குச் சென்ற சந்திரயான் 2 விண்க்லன் குறித்து அர்னாப் கோஸ்வாமியுடன் சில பிரபலங்கள் பேசியது ஒளிபரப்பானது.  இதில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப சாதனைகளைப் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

அப்போது அர்னாப் கோஸ்வாமி மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு சிலர் பாகிஸ்தானைப் பற்றியும் அந்நாட்டு மக்களைப் பற்றியும் தகாத வார்த்தைகள் கூறியதாக சொல்லப்படுகிறது.   அவர்கள், ”பாகிஸ்தானில் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் தீவிரவாதிகள். விளையாட்டு வீரர்களும் தீவிரவாதிகள்.  அங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தீவிரவாதிகள்.” என விமர்சித்துள்ளதாகப் பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

மேலும் அர்னாப் கோஸ்வாமி, “நாம் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம்.  அவர்கள் தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர்.’ எனக் கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.  இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜெனரல் சின்ஹா என்பவர் பாகிஸ்தான் மக்களை நாய்கள் எனவும் விரவில் அவர்கள் ராணுவ தக்குதலை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி பிரிட்டனில் ரிபப்ளிக் டிவி நிகழ்வுகளை ஒளிபரப்பும் ஓர்ல்ட் வைட் மீடியா நெட் ஒர்க் லிமிடெட் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறை 20000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.  இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.19.73 லட்சம் ஆகும்.  அத்துடன் இது குறித்து ரிபப்ளிக் டிவி நிபந்தனை அற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.