ரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இங்கிலாந்து பிரதமர்  தெரீசா மே கையெழுத்திட்ட  6 பக்க கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் பிரிட்டன் தூதர் சர் டிம் பாரோ கொடுத்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிட்டன் விலகுவதாக கொடுத்திருக்கும் கடிதம் மூல மாக ஐரோப்பிய யூனியனுக்கும், இங்கி லாந்துக்கும்  இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது குறித்து கடந்த ஆண்டு  ஜூன் மாதம் நடைபெற்ற கருத்து வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுமார்  ஒரு மணி நேரம் நடைபெற்ற பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இந்த கடிதம் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் பிரதமர் தெரீசா மெ கையெழுத்திட்டார்.

தொடர்ந்து பேசிய தெரசாமே, இதுகுறித்து கூறியதாவது,

“இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வகையிலான சரியான ஒப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய கடுமையான உறுதிப்பாடு” என்றும்

“இது நாம் எதிர்கொள்ளும் வாய்ப்புகளுக்கான முக்கியமான பயணம், நமது பகிரபட்ட மதிப்புகள், விளைவுகள், நலன்கள் ஆகியவற்றை கட்டாயமாக ஒன்றிணைக்கவேண்டும்”.

“ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முடிவு எடுத்துள்ள இந்த நேரத்தில், நாம் ஒன்றாக இருக்க வேண்டியதற்கான தருணம்”

அனைத்து தரப்பினருடன் நடைபெறும் பேச்சு வார்த்தைகளின் போது, பிரெக்ஸிட்டிற்கு பிறகு அதன் அந்தஸ்து குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும், அதன்மூலம்,  “பிரிட்டன் முழுவதிலும் இருக்கும் ஒவ்வொருவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார்கள்” என்றும் கூறினார்.

அரசின் இந்த முடிவை வரவேற்பதாகவும் , “இதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அடிக்கும் அரசுதான் பொறுப்பு என்றும், “பிரிட்டனுக்கு ஒரு முக்கியத் தருணம் என்றும், தொழிலாளர் கட்சித் தலைவரான ஜெர்மி கோபின் கூறினார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்ற முடிவும், எதிர்காலத்தில் ஒன்றியத்துடனான உறவுகளை குறித்தும் நடத்தும் பேச்சுவார்த்தைகளில், ஒருசில பக்கவிளைவு களை சந்திக்கவேண்டியிருக்கும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, வரும் மே மாத மத்தியில் பேச்சு வார்த்தைகள் தொடங்குகிறது.

பிரிட்டனின் இந்த முடிவு காரணமாக, அரசியல் சாசன சட்டப்பிரிவு 50ன் மூலம், இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தத்திற்கு வருவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் உள்ளது என்றும், அதற்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டால், 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருந்து விலகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள்:

ஹங்கேரி, அயர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, உருமேனியா, எசுத்தோனியா, எசுப்பானியா, ஐக்கிய இராச்சியம் (பிரிட்டன்), கிரேக்கம், குரோவாசியா, சிலோவாக்கியா, சுலோவீனியா, சுவீடன், செக் குடியரசு, ஜெர்மனி, சைப்ரஸ், டென்மார்க், நெதர்லாந்து, பல்கேரியா,  பின்லாந்து, பிரான்சஸ், பெல்ஜியம், போர்ச்சுக்கல்,  போலந்து, மால்ட்டா, லக்சம்பர்க், லாத்வியா, லித்துவேனியா ஆகிய 28 உறுப்பு நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய ஒன்றியம்.

ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30%  உருவாக்குகின்றன.

தற்போது பிரிட்டன் (இங்கிலாந்து) யூனியனில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதால், மற்ற நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறும் சூழ்நிலை உருவாகும் என தெரிகிறது.