மாயமான இளைஞர் மலைபாம்பின் வயிற்றில்….! அதிர்ச்சி வீடியோ

Must read

சுலவேசி,

மாயமான இளைஞர் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சி சம்பவம்  இந்தோனேஷியாவில் நடைபெற்றுள்ளது.

இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்தவர் அக்பர். 25 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் பனம்பழம் அறுவடை அதற்கான உபகரணங்களுடன் தோட்டத்திற்கு சென்றவர் திரும்பி வரவில்லை. இதன் காரணமாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அக்பரின் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில், சுமார் 20 அடி நீளம் உள்ள பெரிய மலைப் பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் நகர முடியாமல் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது என்று கூறி உள்ளனர்.

இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்பரின் உறவினர்கள், அந்த பாம்பினை வயிற்றை கிழித்தனர்.

அப்போது, பாம்பின் வயிற்றினுள் அக்பர் இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. தோட்டத்திற்கு சென்ற அக்பரை மலைப்பாம்பு பிடித்து விழுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த பாம்பின் வயிற்றை கிழிக்கும் காட்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுபோன்ற பெரிய மலைப்பாம்புகள், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் காடுகளில் அதிக அளவில்  காணப்படுகிறது.

இந்த பாம்புகள் பெரும்பாலும் வனவிலங்குகளையே உணவாக எடுத்துக்கொள்ளும். ஆனால், தற்போது அக்பரை விழுங்கியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு பாலி சுற்றுலா தீவில் சுற்றுலா பயணி ஒருவர் மலை பாம்பினால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

[youtube https://www.youtube.com/watch?v=mDChoR683eU]

 

 

More articles

Latest article