பிரிஸ்டல்

பிரிஸ்டல் நகரை  சேர்ந்த 72 வயது  முதியவர் 10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்துள்ளார்.

தற்போது பிரிட்டனில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.  அங்கு இதுவரை 46,84,572 பேர் பாதிக்கப்பட்டு 1,28,048 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 43,10,259 பேர் குணமடைந்து தற்போது 2.46.265 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பிரிஸ்டல் நகரில் வசித்து வரும் டேவ் ஸ்மித் என்னும் 72 வயது முதியவர் இந்த 10 மதத்தில் 43 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.   உலக அளவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் 7 முறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார்.

ஒரு முறை தாம் நிச்சயம் இறந்து விடுவோம் என்னும் எண்ணத்தில் தனக்காக ஸ்மித் ஒரு சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து வாங்கி வைத்தார்.  ஆனால் அவர் மரணம் அடையவில்லை.   இவரது உடலில் கொரோனா தாக்குதல் 43 முறை நடந்தும் அதிலிருந்து ஒவ்வொரு முறையும் இவர் விடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.