பசி, வேலையில்லாப் பிரச்னைகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை- சொல்கிறார் முலாயம்

Must read

டில்லி,

பசியால் யாரும் உயிரிழக்க கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என சமாஜ்வாதி  தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று ஜிஎஸ்டி சட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முலாயம் சிங் யாதவ், ஜி எஸ் டி சட்டம் ஒருவழியாக நிறைவேறிவிட்டது. ஆனால் பசியுடன் தூங்க செல்லும் ஒருவரின் வயிற்றை நிரப்ப நம்மால் முடியவில்லையே என்று கவலைப் பட்டார்.

இதேபோல் வேலையில்லாப் பிரச்னையை ஒழிக்கவும் நம்மால் இயலவில்லை என்று வருத்தம் தெரிவித்த முலாயம், பசிக்கு எதிராகவும் வேலையின்மைக்குஎதிராகவும் நாம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

 

 

 

 

More articles

Latest article