ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்தில் ஒரு பாடலை சூர்யா – கார்த்தியின் சகோதரியான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார்.

அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி, விஜே அகல்யா ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் தீம் பாடலை, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உடன் இணைந்து பாடினார் பிருந்தா. இதுதான் அவர் பாடிய முதல் பாடல்.

கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]