சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
திருப்பதி யார்டில் நடைபெறவிருக்கும் பாலப் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பெங்களூரு – திருப்பதி இன்டர்சிட்டி ரெயில் சேவையில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் புகழ்பெற்ற 108 வைணவ திருத்தங்களில் ஒன்றாகும். இங்கு பெருமாளை காண தினசரி பல லட்சம் பல மணி நேரம் காத்திருந்து வணங்கி செல்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், திருப்பதி யார்டில் நடைபெறவிருக்கும் பாலப் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பெங்களூரு – திருப்பதி இன்டர்சிட்டி ரெயில் சேவையில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு – திருப்பதி எக்ஸ்பிரஸ் SMVT Train No :22618 ஏப்ரல் 27, 29 மற்றும் மே 2 ஆகிய நாள்களில் சந்தகிரி மற்றும் திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, மறுமார்க்கத்தில் வண்டி எண் 22617 திருப்பதி-பெங்களூரு அதிவிரைவு ரயில் ஏப்ரல் 28 மற்றும் மே 1 ஆகிய நாள்களில் திருப்பதி மற்றும் சந்தகிரி இடையே பகுதியாக ரத்து. இரு நாள்களும் இந்த ரயில் பிற்பகல் 3.05 மணிக்கு சந்தகிரியில் இருந்து புறப்படும்.
பதி எக்ஸ்பிரஸ் Train No : 16854/16853, கோவை – திருப்பதி எக்ஸ்பிரஸ் Train No : 11615/22616, ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் Train No : 16780/16779 ஆகிய இந்த ரெயில்கள் அனைத்தும் சந்திரகிரி(Chandragiri) ரெயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கிருந்து தான் இயக்கப்படும். திருப்பதிக்கு போகாது.
சென்னை சென்ட்ரல் திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வரை தான் இயக்கப்படும். திருப்பதி – மன்னார்குடி பாமணி எக்ஸ்பிரஸ் திருப்பதி – கொல்லம் எக்ஸ்பிரஸ் திருப்பதியில் புறப்படும் நேரத்தையும் மாற்றப்பட்டுள்ளது.
திருப்பதி – மன்னார்குடி Pamani Express (17407) ஏப்ரல் 28 மற்றும் 30-ம்தேதி திருப்பதியில் இருந்து 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக புறப்படும்.
திருப்பதி – கொல்லம் எக்ஸ்பிரஸ்(17420) ஏப்ரல் 28 மற்றும் மே 1-ம்தேதி 30 நிமிடம் தாமதமாக புறப்படும்.
எனவே, மேற்கண்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு திருப்பதி செல்ல இருக்கும் பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு ரெயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]