திருவனந்தபுரம்:

இந்தியாவிலேயே குறைந்த அளவிலான லஞ்சம் புழங்கும் மாநிலம் கேரளா என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஊடக ஆய்வு மையம் 20 மாநிலங்களில் குறைந்தது 2 மாவட்டங்களை தேர்வு செய்து 150 பேரிடம் ஆய்வு நடத்தியது.

இதில், குறைந்த அளவு லஞ்சம் பெறும் மாநிலமாக கேரளாவும், அதற்கடுத்ததாக இமாச்சலப் பிரதேசமும் உள்ளன.

அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக கேரளாவில் 4% மக்கள் மட்டுமே கூறுகின்றனர்.
அதேசமயம் கர்நாடகாவில் 77% பேர், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ஆகிறது என்கின்றனர்.

கல்வியில் முன்னேறி இருப்பதால், கேரள மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால், அங்கு லஞ்சம் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் கேரளத்தில் 100% லஞ்சம் இல்லை என்று சொல்ல முடியாது. மற்ற மாநிலங்களை விட
லஞ்சம் குறைவு என்றுதான் சொல்ல முடியும்.
வடமாநிலங்களை ஒப்பிடும் போது, கர்நாடகா,தமிழ்நாடு மற்றும் கேரளாவில் லஞ்சம் குறைவாக உள்ளது.

தமிழ்நாடு குறித்து கேரள மக்கள் கூறும்போது, 10 சதவீதம் லஞ்சம் கொடுத்தாலும் தமிழகத்தில் வேலை நடக்கும். ஆனால், கேரளாவில் லஞ்சம் கொடுத்தாலும் வேலை நடப்பதில்லை என்றனர்.

அதேசமயம். நேர்மையை எதிர்பார்ப்பதால், மலையாளிகள் இப்போதும் லஞ்சம் வாங்கினால் புகார் கொடுக்கின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
லஞ்சம்,