டில்லி :

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்குதேசம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும், தெலுங்குதேசம் கட்சி சார்பில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பாஜக மத்திய அரசில் இருந்து விலகினர். தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் செய்து வருகிறார். பாராளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கூடிய தெலுங்குதேச கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாகமுறைப்படி அறிவித்தார். மேலும், ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர்., காங்., இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

இதற்கு ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த தெலுங்கு தேசம், தற்போது ஒய்எஸ்ஆர் கட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. அதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தனியாக மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியும் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.