
பிரபல பிரேசில் பாடகி மரிலியா மெண்டோன்கா விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பாடகி மரிலியா மெண்டோன்கா நேற்று (5.11.2021) காரடிங்காவில் நடைபெற இருந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்கத் தனி விமானத்தின் மூலம் புறப்பட்டார்.
அப்போது காரடிங்காவை நெருங்குவதற்கு 12 கி.மீ தொலைவிற்கு முன்னரே மரிலியா மெண்டோன்கா சென்ற விமானம் அங்கிருந்த அருவியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மரிலியா மெண்டோன்கா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு மரிலியா மெண்டோன்கா, தான் விமானத்தில் ஏறப்போவதாக தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/MariliaMReal/status/1456691273021202440
Patrikai.com official YouTube Channel