ரியோடிஜெனிரா: பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,239 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பை சந்தித்த நாடுகளில், பிரேசில் 2வது இடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 30,412 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 806,000 என்பதாக அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,239 பேர் பலியாகியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி, அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் அந்நாட்டில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 41,058 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,97,000 பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]