ரியோடிஜெனிரா: கொரோனா பாதிப்பில், ரஷ்யாவைப் பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது பிரேசில்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,047 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன் அடுத்ததாக அதிக பாதிப்புகளுடன் ரஷ்யா 2வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருந்தன.
ஆனால் தற்போது பிரேசிலில் உச்சகட்டமாக கொரோனா கோர தாண்டவம் ஆடி ஆயிரக்கணக்கானவர்களை தாக்கி வருகிறது.
இந்நிலையில், ஒரே நாளில் பிரேசிலில் 3,047 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,937 ஆக அதிகரித்தது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எணணிக்கையில் பிரேசில், ரஷ்யாவை முந்தி சென்றது.