பிரேசிலியா

ந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்ய உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது.  இங்கு 1,85.13,305 பேர் பாதிக்கப்பட்டு 3,98,484 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இங்கு 2,94,19,497 பேர் குணம் அடைந்து தற்போது 12,18,050 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   இங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக உள்ளது.

இதையொட்டி இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி மருந்தை வாங்க அந்நாட்டு அரசு ரூ.2500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இட்டது.   சுமார் 2 கோடி டோஸ் கோவாக்சின் மருந்துகளை வாங்க பிரேசில் செய்துள்ள ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது.

ஆனால் பிரேசில் அரசு இந்த ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என விளக்கம் அளித்தது.  இந்நிலையில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ரூ.2500 கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.