சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலை கண்ணபிரான் வேலு என்பவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானத்திற்காக காத்திருப்போருக்கு பொருத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, உடல் உறுப்புகள் தானம் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ‘ஆயுஷ்மான் பவ’ சுகாதார மேளாவில், உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து, உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
இதை்தொடர்ந்து, உடல் உறுப்புகள் தானம் செய்வதை ஊக்கப்படுத்தும் நோக்கில் மாநில அரசு உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கவுரவித்து வருகின்றன. உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆக., 13 உடல் உறுப்பு தான தினமாக கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் மற்றும் விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்கள் சுதந்திர தின விழாவின்போது கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல தமிழ்நாடு அரசு, உடல்உறுப்பு தானம் செய்யப்பட்டவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த கண்ணபிரான் வேலு என்பவர் மூளைச்சாவு அடைந்தார். அவர் பிழைக்க மாட்டார் என்பது உறுதியான நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்வது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அதற்கு அவர்கள் ஒப்புதல் தெரிவித்த நிலையில், வேலுவின் உடல்லி இருந்து இருதயம், சிறுநீரகம் உள்பட பல முக்கிய பாகங்கள் எடுக்கப்பட்டு, தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட்டு வருகிறது,.