பாலாசோர்: சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவபட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

நாட்டின் ராணுவ ஆய்வு மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, ரஷியாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் அரபிக்கடலில், சென்னை போர்க்கப்பலில் இருந்து சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.
நகரும் வாகனத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரம்மோஸ், 300 கிமீ தொலைவில், குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel