மும்பை:
வீட்டுக்கே வந்து டீசல் விநியோகம் செய்யும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் லிமிடெட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனம் லிமிடெட் நிறுவன சில்லறை வர்த்தக பிரிவு நிர்வாக இயக்குநர் பி. எஸ். ரவி தெரிவிக்கையில், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, வீட்டுக்கே வந்து டீசல் விநியோகம் செய்யும் திட்டம் துவக்க உள்ளதாகவும், கிழக்கு பிராந்தியத்தில் துவக்கப்பட்ட உள்ள இந்த திட்டத்தில் 15 மொபைல் பணியாளர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் லிமிடெட் நிறுவனம் மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 63 மொபைல் விநியோகிப்பார்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel