விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லூர் வசந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் இவருடைய மகள் அன்பரசியும், அதே பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் விஸ்வநாதனுக்கு கடந்த மாதம் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதையறிந்த அன்பரசி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறையினரால் இவ்விசயத்தில் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடிய வில்லை. இதனால் மனமுடைந்த அந்தப் பெண் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் எப்படியோ காப்பற்றப்பட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் இவ்வளவையும் மீறி, விஸ்வநாதனுக்கு நாளை மறுநாள் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை அறிந்த அன்பரசி “காதலன் எங்கே” என எழுதப்பட்ட பலகையுடன் விஸ்வநாதன் வீட்டின் முன்பு அமைதிப்போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பதாக அன்பரசிக்கு உறுதியளித்ததும் அன்பரசி தர்ணா போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
– லெட்சுமி பிரியா