பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் உரியில் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மேகம் மூண்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்ததால் சீன பொருட்களை புறக்கணிக்கும்படி இந்தியாவில் பெருமளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இப்புறக்கணிப்பு நம் நாட்டு வியாபாரிகளையும் பாதிக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

chinese_crackers

தீபாவளிக்கான பட்டாசு வியாபாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் சீனப்பட்டாசுகளை புறக்கணிக்கும்படி அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஆனால் பழைய டில்லியில் உள்ள பட்டாசு வியாபாரிகள் பல லட்சங்கள் கொடுத்து நான்கு மாதங்களுக்கு முன்னரே வாங்கிவிட்டதால் தங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி லஜபதிராய் மார்கெட்டில் கடை வைத்திருக்கும் நிதின் மல்ஹோத்ரா என்பவர் கூறும்போது அரசியல்வாதிகள் சீனப் பொருட்களை புறக்கணிப்பதாக முடிவெடுக்கும் முன்னர் எங்களைப் போன்றவர்களின் நிலைகளை சிந்தித்து பின்னர் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் பல லட்சம் முதலீடு செய்து பொருட்களை வாங்கி வைத்திருக்கிறோம் அதுமட்டுமன்றி இந்தியாவில் இதுபோன்ற பொருட்கள் தயாரிக்கும் உள்கட்டமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை இந்நிலையில் சீனப் பொருட்களை புறக்கனிப்பது எவ்விதத்தில் நன்மை பயக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்.
பட்டாசுகள் தயாரிப்பில் சீனா தனிப்பெரும் சக்தியாக விளங்குகிறது. வானவேடிக்கைக்கான பட்டாசுகள் பெரும்பாலும் சீன தயாரிப்புகள்தான். சீனப்பொருட்களை புறக்கணிப்பதும், இந்திய தயாரிப்புகளை வாங்க ஊக்கப்படுத்துவதும் நல்லதுதான் ஆனால் எங்களைப் போன்றவர்களின் நிலைகளை கருத்தில் கொண்டு நாங்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள போதுமான கால அவகாசங்கள் அளிக்ககப்பட வேண்டும் என்றும். இந்த திடீர் புறக்கணிப்பு கிட்டத்தட்ட 3 லட்சம் வியாபாரிகளின் குடும்பத்தை நஷ்டத்தில் தள்ளும் என்றும் வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.