கரண் ஜோஹர், யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் சல்மான் கான் ஆகியோரை புறக்கணிக்குமாறு கோரி ஒரு வித்தியாசமான ஆன்லைன் மனு 40 லட்சம் கையெழுத்துக்கள் கொண்டு வளம் வந்து கொண்டிருக்கிறது . பாலிவுட்டில் நிலவும் வாரிசு சினிமா அரசியலை எதிர்த்து இந்த மனு தொடங்கப்பட்டுள்ளது.

பி.கே., கை போ சே, கேதார்நாத் மற்றும் ராப்தா படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாக பாராட்டப்பட்டிருந்தாலும் , சினிமா துறைக்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்ட சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் துயர மரணத்திற்கு பலர் வாரிசு சினிமா அரசியல் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் வெகுண்டெழுந்த மக்கள் சுஷாந்தின் சொந்த ஊரான பாட்னாவில் உள்ள சல்மான் கானின் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர் .

இந்திய சினிமாவில் (“ பாலிவுட் ”) வாரிசு சினிமா அரசியல் நடைமுறைக்கு எதிராக நாங்கள் கூட்டாக குரல் எழுப்ப விரும்புகிறோம், இது வேகமாக பரவியுள்ளது என்பது யதார்த்தமான உண்மை . பாலிவுட் ஒரு தன்னலக்குழு அல்ல (ஒரு சிலரால் ஆளப்படுகிறது) அது ஒரு ஜனநாயகம் என் ஆம்மனுவில் கூறப்பட்டுள்ளது .

இந்த மனுவில், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஹாட் ஸ்டார் போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவை திரைப்படங்கள் அல்ல, பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் குழந்தைகளைத் வளர்த்து ஆளாக்குவதற்கான தளங்கள் இவை என கூறப்பட்டுள்ளது .

இந்நிலையில் பாட்னாவில் உள்ள சல்மான் கானின் கடையை அழிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன. ஒரு வீடியோவில் (கீழே காண்க), சல்மான் கானின் புகைப்படத்தை அடையாள அட்டையிலிருந்து அகற்றுமாறு கடை உரிமையாளரிடம் ரசிகர்கள் கோருகின்றனர்.

 

https://twitter.com/Aryann45_/status/1273481871658110979

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை யஷ் ராஜ் பிலிம்ஸ் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் நகல்களை மும்பை காவல்துறைக்கு சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.