கோவில்பட்டி

டும் ரயிலில் திடீரென நடுப்படுக்கை அறுந்து விழுந்ததால் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான்.

இன்று காலை நாகர்கோவில் – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், வாஞ்சிமணியாச்சி வந்தபோது அந்த ரயிலில் கோயம்புத்தூரைச் சேர்ந்த மேத்யூஸ் – புவிதா மற்றும் இவர்களது 4 வயது மகனான ஜெயின் சன் ஆகியோர் S7 ரயில் பெட்டியில் ஏறினர். அவர்கள், சிறுவன் ஜெயின்சன்னை கீழ் படுக்கையில் தூங்க வைத்துவிட்டு, எதிரே இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்த போது, சிறுவன் ஜெயின்சன் படுத்திருந்த படுக்கைக்கு மேல் இருந்த நடுப்படுக்கை திடீரென அறுந்து விழுந்தது. நடுப்படுக்கை திடீரென விழந்ததால், கீழே உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஜெயின் சன் படுகாயம் அடைந்தான்.

அந்த சிறுவனின் பெற்றோரும், அருகில் இருந்த மற்ற பயணிகளும் உடனடியாக நடுப்படுக்கையை தூக்கி சிறுவனை மீட்டனர். இருப்பினும் அந்த சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், உடனடியாக மதுரை ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

ரயில் மதுரை வந்ததும் அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் ஜெயின்சன்னுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.