கோழிகோட்:

கேரளா மாநிலம் கோழிகோட்டில் ஜெல்லி மிட்டாய் (ஜெல்லி கேண்டி) சாப்பிட்ட நான்கு வயது சிறுவன் இறந்தான். இதனால் கோழிகோட்டில் ஜெல்லி மிட்டாய்கள் விற்பனைக்கும், விநியோகத்திற்கும் உணவு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது.

சுகாரா பி மற்றும் பஷீர் ஆகியோரது 4 வயது மகன் யூசுப். இவனும், இவரது தாய் சுகாரா பியும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு யூசுப் இற ந்தான். ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் தான் சிறுவன் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து கசாபா போலீசார் மர்மச்சாவு என்று வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். சம்மந்தப்பட்ட பே க்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த சோதனையிட்டதை தொடர்ந்து பேக்கரி பூட்டப்பட்டது.

திரூரில் உள்ள மொத்த விற்பனையாளர் ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து இந்த ஜெல்லி மிட்டாய்களை வாங்கி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மிட்டாய் மதுரை நேஷனல் கன்பெக்ஷனரி என்ற நிறுவனத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் காலாவதி காலம் மே 25ம் தேதியாகும். சுகரா பி கோழிகோட் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பே க்கரியில் இருந்து கடந்த 23ம் தேதி ஜெல்லி மிட்டாயை வாங்கியுள்ளார். இதை சாப்பிட்ட பிறகு தாய்க்கும், மகனுக்கும் வாந்தி ஏற்பட்டுள்ளது. வயிற்றுபோக்கும் ஏற்பட்டது.

இதனால் இருவரும் கப்பாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உடல்நிலை மோசமானதால் இருவரும் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால், சிறுவன் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தான். தாய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பிரேத பரிசோதனைக்கு பின் யூசுப் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.