லாஸ் ஏஞ்சல்ஸ்

ரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை, பளு தூக்குதல் உள்ளிட்டவை நிற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞலஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.  2028 ஆம் வருட ஒலிம்பிக்கின் விளையாட்டுப் போட்டிகள் குறித்த ஆரம்ப பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இதில் குத்துச் சண்டை, பளு தூக்குதல் உள்ளிட்ட 28 போட்டிகளின் பெயர்கள் குறிப்பிடப்படாததால் கடும் பரபரப்பு உருவாகி உள்ளது.

வரும் 2028 ஆம் வருட ஒலிம்பிக்கில் இந்த போட்டிகள் நீக்கப்படலாம் என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.  மேலும் இனி வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த போட்டிகள் நிரந்தரமாக நீக்கப்படும்  எனவும் விளையாட்டு வீரர்களிடையே கடும் அச்சம் உள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தோமஸ் பர்க் குத்துச் சண்டை மற்றும் பளு தூக்குதல் ஆகியவை சிக்கல் தருபவை என விமர்சித்துள்ளார்.  மேலும் அந்தக குழுக்களின் தலைமை மற்றும் ஊழல் குறித்து தனது அதிருப்தியை அவர் தெரிவித்துள்ளார்.  இந்த போட்டிகளில் ஊக்கமருந்து தொடர்பான பிரச்சினைகளை கமிட்டி அதிக அளவில் சந்திக்க நேர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வெளியாகி உள்ள போட்டிகளில் சார்பிங், ஸ்கேட் போர்டிங் உள்ளிடவை இரண்டாம் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.  எனவே இவை எல்லாம் அடுத்தடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் குத்துச்சண்டை வீராங்கனைகள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்து போராட்டம் நடத்தியது   குறிப்பிடத்தக்கதாகும்.