இரண்டாவது இன்னிங்ஸ் – 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!

Must read

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

துவக்க வீரர் மேத்யூ வேட் 34 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 6 ரன்கள‍ையும் எடுத்து களத்தில் உள்ளனர்.

ஜோ பர்ன்ஸ் 4 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். சற்று அதிரடியாக ஆடிய மார்னஸ் லபுஷேன் 28 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் நடையைக் கட்டினார். ஸ்டீவ் ஸ்மித் இந்தமுறையும் சொதப்பினார். அவர் 8 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் பெளல்டானார். இத்தொடர் முழுவதுமே ஸ்மித் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில், இந்திய அணியைவிட 50 ரன்கள் பின்தங்கியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்களுக்குள் அவுட்டாக்கும் பட்சத்தில், இந்திய அணிக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

 

More articles

Latest article