அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் விவேக் இயக்கம் இப்படத்தை எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

குத்துச்சண்டை வீராங்கனையும் நடிகையுமான ரித்திகா சிங், இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை, சென்னையில் நேற்று (ஜூன் 21) நடைபெற்றது.

இந்நிலையில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘7-ம் அறிவு’ படத்தின் வில்லன் ஜானி ட்ரி நக்யென்,தற்காப்புக் கலைகளை அருண் விஜய்க்கு கற்றுக் கொடுத்துள்ளார். மேலும், பீட்டர் ஹெய்னிடம் குத்துச்சண்டை பயிற்சியைப் பெற்றுள்ளார் அருண் விஜய்.