அபுதாபி: பஞ்சாப் அணிக்கு எதிராக கிடைத்த சிறந்த வெற்றிக்கு, பவுலர்களின் பங்களிப்பே பிரதான காரணம் என்றுள்ளார் மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா.
பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில், 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.
ரோகித் ஷர்மா கூறியுள்ளதாவது, “போட்டியை நாங்கள் சரியாக துவக்கவில்லை என்றாலும்கூட, எதிரணியின் பந்துவீச்சு பலவீனங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிவுசெய்தோம்.
பஞ்சாபின் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலுக்கு பந்து வீசுவது எளிதான ஒன்றல்ல. ஆனாலும், துவக்கத்திலேயே சில விக்கெட்டுகளை கைப்பற்றுவது எங்களின் திட்டமாக இருந்தது.
பெங்களூரு அணிக்கெதிரான எங்கள் பவுலிங் சிறப்பாக அமையவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் ஒர்க்-அவுட் ஆனது. அதற்காக கூடுதல் கவனம் செலுத்தினோம். எங்கள் பவுலர்களில் சிலரை(பெளல்ட் & பேட்டிசன்) எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொண்டேன்” என்றுள்ளார் அவர்.