சென்னை
சென்னை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தாம்பரம், பல்லாவரம் போன்ற தாலுக்காக்களின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் பல பகுதிகள் இணைக்கப் பட்டதால் அந்தப் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கு வசதியாக அந்தப் பகுதிகள் சென்னை மாவட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. அதை ஒட்டி பல தாலுக்காக்களீன் எல்லை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது.
ஆலந்தூர் தாலுக்கா
நந்தம்பாக்கம், ஆலந்தூர், மீனம்பாக்கம், முகலிவாக்கம் மணப்பாக்கம், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், தலைக்கன்சேரி மற்றும் மௌலிவாக்கம் ஆகிய பகுதிகள் ஆலந்தூர் தாலுக்காவில் இடம் பெற்று அவை சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லூர் தாலுக்கா
பழைய பல்லாவரம் தாலுக்காவில் இருந்த பல பகுதிகள் இணைக்கப்பட்டு தற்போது சோழிங்கநல்லூர் தாலுக்காவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தாலுக்காவில் உள்ளகரம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியான் பேட்டை, செம்மன்சேரி, உத்தண்டி மற்றும் சீவரம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு சோழிங்கநல்லூர் தாலுக்கா என்னும் பெயரில் சென்னை மாவட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளது.
முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் மற்றும் சோழிங்க நல்லூர் உட்பட 13 தாலுக்காக்கள் இருந்தன. தற்போது 11 தாலுக்காக்கள் மட்டுமே உள்ளன. அதே போல இந்த மாவட்டத்தின் பரப்பளவும் குறைந்துள்ளது. இந்த மாறுதல் வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளது.